Tuesday, January 3, 2012

ரூ 150 கோடிக்கு சூதாட்டம்!!

இந்தியா & ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதற்கிடையே சூதாட்டக்காரர்கள் இந்த டெஸ்டில் சச்சின் சதம் விளாசுவாரா? மாட்டாரா? என பெட் கட்ட தொடங்கி விட்டனர்.

சிட்னி மைதானம் சச்சினுக்கு மிகவும் ராசியாக இருந்துள்ளது. இங்கு அவர் 2 சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் விளாசியுள்ளார்.
சராசரி 221 ஆகும். மேலும் 4 ஆண்டுகளாக சச்சின் புதிய ஆண்டு தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து வந்துள்ளார். இதனால் சச்சின் சதத்தை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு பெட் கட்டப்பட்டுள்ளதாம்.
உதாரணமாக சச்சின் சதம் விளாசுவார் என ரூ.10க்கு பெட் கட்டினால் ரூ.30 கிடைக்கும். சச்சின் விளாச மாட்டார் என ஒரு கோஷ்டியும் பெட் கட்டி வருகிறது. இதுதவிர சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெறும் என ஏராளமானோர் பெட் கட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

free counters