கோவை கணபதி சுபாஷ் நகரை
சேர்ந்தவர் கவுதமன் (26). பழைய இரும்பு வியாபாரி. இவரும், சூலூர் அடுத்த
அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்த கீதா (25)வும் கடந்த 2009ல் காதல் திருமணம்
செய்து கொண்டனர்.
இந்நிலையில் பீளமேட்டை சேர்ந்த உமா மகேஸ்வரியுடன் (25) கவுதமனுக்கு
கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. உமா மகேஸ்வரி பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில்
விரிவுரையாளராக உள்ளார்.
இதையடுத்து உமா மகேஸ்வரி, கவுதமனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்,
‘நம் தொடர்பு உன் மனைவிக்கு தெரிந்துவிட்டது. அவள் நம்மை காட்டிக்
கொடுத்துவிடுவாள்.
அவளை கொன்றுவிடு; உன்னால் முடியாவிட்டால் கூலிப்படையை ஏவி
தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா. நாம் புதிய வாழ்க்கையை
தொடங்குவோம்’ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கடிதம் கீதாவின் கைக்கு கிடைத்தது. அதிர்ச்சியடைந்த கீதா, கணவனிடம்
இது குறித்து கேட்டபோது ‘உன்னை கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்த கீதா நேற்று முன்தினம் போலீசில் புகார்
அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமன், அவரது கள்ளக்காதலி உமா
மகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.
கவுதமனின் தாய் சரோஜா, தந்தை பாலசுந்தரம் ஆகியோர் உடந்தையாக இருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

வேலியே பயிரை மேய்கிறது..இவங்கலாம் பேராசிரியை ன்னு யார் சொன்னது ..
ReplyDelete