Friday, January 6, 2012

5.2 கோடி ஆபாச இதழ்கள் சீனாவில் பறிமுதல்!!

சீனாவில் 5.2 கோடிக்கு அதிகமான ஆபாச இதழ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீனாவில் சட்டவிரோதமாக அறிவுசார் சொத்துக்களை திருடி வெளியிடுபவர்கள், சட்டவிரோதமாக புத்தகங்கள் வெளியிடுபவர்கள், ஆபாச இதழ்களை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டில் மொத்தம் 5.2 கோடி சட்டவிரோத இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் திருடப்பட்ட செய்திகள், ஆபாச புத்தகங்கள் அடங்கும்.
இதுதொடர்பாக 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆன்லைனில் 18 லட்சம் ஆபாச செய்திகள், படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆடியோ, வீடியோக்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 2010ம் ஆண்டில் 4.40 கோடி புத்தகங்கள், ஆபாச வீடியோக்கள்தான் கைப்பற்றப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு அதை விட அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

5. செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றும் இங்கிலாந்து சமூக சேவகர் பாகிஸ்தானில் கடத்தல்

இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றும் இங்கிலாந்துகாரர் கடத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் செஞ்சிலுவை சங்கத்தினர், மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றனர்.
குவெட்டா நகரில் செஞ்சிலுவை சங்கத்தினர் முகாமிட்டு நிவாரணப் பணிகள் செய்து வருகின்றனர். இந்த கமிட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கலீல் ரஸ்ஜெத் டேல் என்பவரும் மக்களுக்கு சமூக சேவை செய்து வருகிறார்.
இந்நிலையில் பணி முடித்து விட்டு தனது இல்லத்துக்கு செஞ்சிலுவை சங்க வாகனத்தில் நேற்று கலீல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த மர்ம ஆசாமிகள், கலீலை கடத்தி சென்றனர்.
இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண போலீஸ் தலைவர் பைசல் மமூத் கூறுகையில், 'குவெட்டா நகரின் எல்லா எல்லைகளுக்கும் சீல் வைத்துள்ளோம்.
செஞ்சிலுவை சங்க வாகனத்தில் சென்றவரை கடத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. அவரை மீட்க முயற்சித்து வருகிறோம்' என்றார். செஞ்சிலுவை சங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'கடத்தல்காரர்கள் கலீலை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகள் வழங்குவது உள்பட சமூக சேவை தொடரும்' என்றார்.

No comments:

Post a Comment

free counters