Monday, January 23, 2012

நாட்டில் 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்கியது!

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்பகுதியில் சிமெண்டு மற்றும் இரும்பு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்க தொடங்கின.
இது குறித்து உடனடியாக பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பல்களில் சிக்கியிருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
மூழ்கிய வற்றில் இரும்பு தாது ஏற்றிய கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டதாகும். கப்பல்கள் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

free counters