Wednesday, January 11, 2012

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு!! 20 பேர் பலி !


பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்ருத் நகர் மார்கெட்டில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அதில் அமர்ந்திருந்த 20 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெஷாவர்  மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். குண்டுவெடிப்பில் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் மற்றும் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இப்பகுதி, தெரிக் இ தலிபான், லஷ்கர் இ இஸ்லாம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

free counters