Wednesday, January 11, 2012

பெரியாறு அணை தேசியமயமாக்கப்பட வேண்டும் - சுவாமி நித்யானந்தர்!



இருமாநில தொடர்புடைய பெரியாறு அணை தேசியமயமாக்கப்பட வேண்டும்,என சுவாமி நித்யானந்தா கூறினார்.மதுரை அண்ணாநகரில் நித்யானந்தா தியான பீடம் சார்பில், தியானம், யோகா வகுப்புகளை, நேற்று மதுரை ஆதீனம் துவக்கி வைத்தார். நித்யானந்தா தலைமை வகித்தார். 

அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூருக்கு ரூ.96 லட்சம் மதிப்புள்ள நிவாரண உதவிகளை செய்துள்ளேன். காவிரி, பெரியாறு அணை போன்ற இருமாநில பிரச்னைகள் தீர, தேசியமயம்தான் தீர்வு. பெரியாறு அணை பிரச்னை குறித்து தற்போதைக்கு போராட்டம் நடத்தும் எண்ணமில்லை. எனது பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. 151 நாடுகளில் தீட்சை பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். முழு சன்னியாசம் பெற்ற 1200 பேர் உள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment

free counters