Sunday, January 15, 2012

இங்கிலாந்து இளவரசரின் மனைவிக்கு 22 ஆண்டு கால சிறைத்தண்டனை!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன்(53).
இவர் கடந்த 1986ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இளவரசர் ஆண்ட்ரூவுடன் வாழ்ந்து வந்தார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர் சினிமா பட தயாரிப்பாளராகவும், டெலிவிஷன் டாகுமெண்டரி தயாரிப்பாளராகவும் உள்ளார். எனவே டாகுமெண்டரி தயாரிப்பதற்காக துருக்கி தலைநகர் அங்காரா அருகே உள்ள அனாதை குழந்தைகள் இல்லத்தில் ரகசியமாக படம் எடுத்தார்.
இதற்கு துருக்கி அரசிடம் முன் அனுமதி பெறவில்லை என கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பூர்வமாக உதவும்படி இங்கிலாந்து அரசிடம் கேட்டுள்ளது.
அதை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என தெரியவில்லை. இதற்கிடையே சாராபெர்குசன் மீது துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாரா பெர்குசனுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

free counters