Sunday, January 15, 2012

இத்தாலிக் கடலில் 4200 பேருடன் மூழ்கிய ஆடம்பரக் கப்பல்!



         சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஆடம்பர சொகுசுக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
இத்தாலிக் கடற்கரையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த கப்பலில் மொத்தமாக 4200 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 24 சுற்றுலாப் பயணிகளும் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய இத்தாலிய கடலோரக் காவற்படையினர் மேலும் கடலில் குதித்த மூவர் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.
முப்பதுக்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதில் சிலர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய பாறையொன்றின் மீது மோதியதால் தான் விபத்து நேர்ந்துள்ளது. அதில் 3200 பயணிகளும், 1000 கப்பல் பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
மீட்புப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானோர் மீட்டக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய தலைநகரமான ரோமிலுள்ள பிரித்தானியத் தூதரகம் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணிகளின் உறவுகள் தொடர்பு கொள்வதற்காக +39 06 4220 0001 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

free counters