Sunday, January 22, 2012

அப்துல் கலாம் நாளை யாழ். செல்கிறார்

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (23) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதகர அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார். 


இந்தியன் வங்கியில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யாழ். விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளார். 

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார். 

மேலும் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என யாழ். இந்திய துணைத்தூதுவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

free counters