Thursday, January 19, 2012

ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்!



மதராசப்பட்டினம் படத்தின் நாயகி எமி ஜாக்சன், விரைவில் ஆக்ஷ்ன் ஹீரோயினராக அவதரிக்க இருக்கிறார். விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப்பட்டினம் படம் மூலம் ஆர்யாவுக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இவர் இப்போது மீண்டும் விஜய் இயக்கத்தில் உருவாகும் தாண்டவம் படத்தில் விக்ரமிற்கு இரண்டாவது ஹீரோயினாக நடிக்க உள்ளார். தாண்டவம் படத்தில் எமியின் ரோல் ரொம்பவே வித்தியாசமானதாம். அப்படியென்ன வித்தியாசமான ரோல் என்று கேட்கிறீர்களா...? ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா ஜூலி போன்று ஆக்ஷ்ன் வேடத்தில் நடிக்க போகிறாராம்.

இதுகுறித்து எமி அளித்துள்ள பேட்டியில், இதுவரை நான் ஏற்றிராத கதாபாத்திரம் எனக்கு தாண்டவம் படத்தில் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஆக்ஷ்ன் திறமையை இப்படம் மூலம் நிரூபிப்பேன். தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு இடத்தை கொடுத்தவர் டைரக்டர் விஜய். மீண்டும் அவருடைய படத்தில் நான் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதற்காக அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகும் தாண்டவம் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் தவிர அனுஷ்கா, ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment

free counters