Wednesday, January 11, 2012

மேர்வினை கடவுள் தண்டிக்கிறார்!


அமைச்சர் மேர்வின் சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேர்வின் சில்வாவுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து நன்றி தெரிவிக்கும் பூஜை ஒன்று இன்று முன்னேஸ்வரம் காளிகோயிலில் இடம்பெற்றது.
களனி பிரதேசசபை மற்றும் பேலியகொட நகரசபை ஆகியவற்றின் 16 உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிடம் விடுத்துள்ளனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் மேர்வின் சில்வாவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் காளிக்கோயிலின் பலிபூசையை நடத்தவிடாது மேர்வின் சில்வா தடைகளை ஏற்படுத்தினார். அதன்போது தாம் காளியிடம் இந்த குற்றத்துக்காக தண்டனை வழங்கவேண்டும் என்று வேண்டுதல் வைத்ததாக காளிகோயிலின் பிரதம பூசகர் சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.
அந்தவேண்டுதலின் அடிப்படையிலேயே மேர்வின் சில்வாவுக்கு இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே அதனை குறித்தே பூசை வழிபாடு இடம்பெற்றதாக சிவபாதசுந்தரம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

free counters