Wednesday, January 11, 2012

தொடர்ந்து அதிகரிக்கும் அணுவியல் விஞ்ஞானி கொலைகள்!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அணுவியல் விஞ்ஞானியுமான முஸ்தாபா அஹ்மதி ரோஷன் என்பவர் கார் குண்டு வெடித்ததில் மரணமடைந்தார்.
இவர் காரில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் விஞ்ஞானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரானின் அல்லாமே தபதாய் பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அருகே நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக ஈரானில் விஞ்ஞானிகள் கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.அமெரிக்காவும், இஸ்ரேலும் இக்கொலைகளைத் திட்டமிட்டுச் செய்வதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அந்த நாடுகள் இந்தக் குற்றச்சாட்டை ஏற்பதாக இல்லை.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஐம்பது வயது நிரம்பிய பேராசிரியர் மசூத் அலி முகம்மதி என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு தொலைவிலிருந்து இயக்கிய குண்டு வெடித்ததில் மரணத்தைத் தழுவினார்.
விஞ்ஞானிகளைக் கொல்லத் திட்டமிட்ட தாக்குதல் முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் இவையனைத்தும் ஈரானின் அணுசக்தி ஆய்வுகளுக்கு எதிரானவையாக இருப்பது தெளிவாகிறது.

ஈரான் தனது அணுசக்தி ஆய்வுகள் மின்சாரத் தேவைக்காக நடைபெறுவதாகக் கூறினாலும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் இக்கூற்றை நம்பத் தயாராக இல்லை.

No comments:

Post a Comment

free counters