எயிட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவிட வழங்கப்பட்ட அறக்கட்டளை நிதியை முறைகேடாக
பயன்படுத்தியதாக பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி மீது புகார் எழுந்துள்ளது.
இது
தொடர்பாக லண்டனிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ள
செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சேர்ந்த
ஒரு அறக்கட்டளை நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் எயிட்ஸ் கட்டுப்பாட்டு
திட்டத்திற்கும், எயிட்ஸ் பாதித்துள்ள பிறந்த குழந்தைகள் நலனுக்கும்,
விழிப்புண்வு பணிகளுக்கும் செலவிட 2.70 மில்லியன் யூரோ நிதியினை அந்நாட்டு
ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியின் மனைவி கர்ர்லாபுருனியிடம்
வழங்கியிருந்தது.
இந்நிலையில் அந்த நிதியினை எயிட்ஸ் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு
செலவிடாமல் தனது நெருங்கிய தோழியின் அறக்கட்டளைக்கு ஒதுக்குமாறும் அதனை
கார்லாபுரூனியின் தோழி ஜூலியன்ஸிவாஞ்சே மூலமாக கொடுத்துள்ளார் என்று
கூறப்பட்டுள்ளது.
இதனை பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை மறுத்துள்ளது. கார்லாபுரூனி கூறுகையில்,
தனது தோழியும், எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிசாரத்திற்காக அறக்கட்டளை
நடத்துவதாகவும், அதன் பேரிலே வழங்கியதாகவும் முறைகேடு செய்யவில்லை
என்றார்.

No comments:
Post a Comment