Sunday, January 29, 2012

பிரசாரத்தை தொடங்கினார் சூகி!

மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக லீக் கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(66) முதன் முறையாக போட்டியிடுகிறார்.
மியான்மர் அரசியல் கைதிகளை விடுவித்தல், அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல், பழங்குடியினர் உடனான மோதலை நிறுத்தி வைத்தல் என சமீப காலமாக பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என கருதுகிறது.
இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் கூட கடந்த 2010ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை சூகி கட்சி புறக்கணித்தது. இதனால் அவரது கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அவரின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் 48 இடங்களுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ள சூகி, தொடர்ச்சியாக தற்போது யாங்கூன் அருகில் உள்ள காவ்மு என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த 17ம் திகதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதன் முதற்கட்டமாக இன்று ‌யாங்கூன் மாவட்டத்தின் தாவேய் நகரில் தனது முதல் பிரசாரத்தினை தொடக்கினார். மேலும் மியான்மரில் இரண்டாவது மிகப்‌பெரிய நகரமான பர்மா, மான்ட்லே உட்பட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் நெயான்வின் தெரிவித்தார்.
மியான்மர் பாராளுமன்ற கீழ்சபையின் மொத்தமுள்ள 48 இடங்களில், 40 இடங்களில் சூச்சியின் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters