Sunday, January 29, 2012

ஐ.நா குழு இன்று ஈரானுக்கு பயணம்!

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியைச் சேர்ந்த(ஐ.ஏ.இ.ஏ) உயர் அதிகாரிகள் இன்று ஈரான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அணு சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடை விதித்தது மற்றும் ஈரான் மத்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் ‌கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய  கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பும் ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது.
மின்சார தேவைக்காக மட்டுமே அணுசோதனை என ஈரான் கூறிவந்தாலும், ‌தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டல் மையத்தினை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ.) துணை இயக்குனர் ஜெரனல் ஹெர்மான்நெக்ரட்ஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று ஈரான் சென்று அங்கு ஆய்வு நடத்துகின்றனர்.
அப்போது ஈரான் அணுவிஞ்ஞானிகள் மற்றும் உயரதிகாரிகளிடம் அணுசோதனை குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் ஈரானில் முகாமிட்டு இந்த சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவர் யூகியோ அமோனா கூறுகையில், ‌ஈரான் சென்றுள்ள குழுவினருக்கு அங்குள்ள அணுசக்தித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிப்பர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.
ஈரானின் அணுசோதனை குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி குழு நடத்தும் இரண்டாவது சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு முதன்முறையாக ஐ.ஏ.இ.ஏ. குழு ஈரான் ‌சென்று அணுதிட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.

No comments:

Post a Comment

free counters