ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடன் வினவியபோது, மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் இன்னும் கட்சி கூடி தீர்மானம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடக்கம் மார்ச் 23ம் திகதிவரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத் தொடரில் பங்கேற்கவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழு பெப்ரவரி மத்தியில் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டும் என சில முக்கிய நாடுகள் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment