Thursday, January 19, 2012

ஈரான் மீது போர் தொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை!

சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம், அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசுவோம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறி வருகிறது.
இதற்கு ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரானில் ஏற்கனவே ஷியா - சன்னி பிரிவினருக்கு இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்.
அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் ஈரான் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி கழக பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அந்த நாடு இப்போது ஒப்புக் கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் போர் தொடுத்தால், அமைதி நடவடிக்கை சீர்கெட்டு விடும் என்று எச்சரித்தார்.

No comments:

Post a Comment

free counters