தனது மனைவிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற பிஎல்டி ஸ்டீக் உணவு விடுதியில், மனைவி மிஷேலுக்கும், தனது நெருங்கிய நண்பர்களுக்கும் ஒபாமா இரவு விருந்தளித்தார். அப்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் பாதுகாக்கும் விதமாக அந்தப் பகுதி முழுவதையும் அமெரிக்க உளவுத்துறையினர் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
அன்றைய தினம் முழுவதையும் மனைவி மிஷேலுடன் ஒபாமா செலவிட்டார். ஒபாமா கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்டபோது மிஷேல், பார்ப்பதற்கு என்னைவிட 20 வயது குறைவானவர் போல இருப்பதாக தெரிவித்தனர். இப்போது சமவயதுடையவர்களை போல இருக்கிறோம் என்று கூறினார்.
அமெரிக்க முதல் தம்பதியினர் தங்கள் பிறந்த தினத்தை வாஷிங்டனின் புகழ்பெற்ற விடுதிகளில் கொண்டாடுவது வழக்கமாகும். இந்த விடுதி ஒபாமா பர்கர் என்ற புதுவகை பர்கர் உணவுப் பண்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 28 அமெரிக்க டொலராகும்.


No comments:
Post a Comment