புற்றுநோய் பாதித்துள்ள வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி ஹ்யூகோ சவேஸ் இன்னும்
ஓராண்டு கூட உயிர் வாழ மாட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலா
நாட்டின் ஜனாதிபதி ஹ்யூகோ சவேஸின்(56) புரோஸ்டிரேட் சுரப்பியில்
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கியூபாவில் சத்திர
சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
இதன் பின் தான் நலமாக உள்ளதாகவும், புற்றுநோய் செல்கள் தனது உடலில் இல்லவே இல்லை என்றும் சவேஸ் அறிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்
வரை சவேஸ் உயிருடன் இருந்தால் அது அவர் செய்த பாக்கியம் என்று அவருக்கு
நெருக்கமான வைத்தியர்கள் கூறியதாக தி டெய்லி மெயில் செய்தி
வெளியிட்டுள்ளது.
சவேஸ் பெருங்குடலின் ஒரு பாகம் மற்றும் புரோஸ்டிரேட் சுரப்பியை பாதித்த
புற்றுநோய் தற்போது அவரது எழும்பு உட்பட உடலின் பல்வேறு பகுதிகளுக்கு
பரவியுள்ளது என்று அவரது வைத்தியர்கள் தெரிவித்ததாக பிரேசில் நாட்டு
பத்திரிக்கை வேஜா செய்தி வெளியிட்டுள்ளது.
கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் சத்திர சிகிச்சையால் பலனில்லை என்றும்,
உடனடியாக ஐரோப்பாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் சேருமாறும் கடந்த ஆகஸ்ட்
மாதமே வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் புற்றுநோய் மையத்தில்
சேர மறுத்துவிட்டார் என்று அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் ஜனாதிபதி பணியில் குறிக்கிடும் எந்தவித சிகிச்சையையும் தான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று சவேஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment