இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஹொலி வினியாட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்தியகிழக்கு, தென்னாசிய நாடுகளுக்கான பிரதி உதவிச்செயலர் ஹொலி வினியாட் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசு மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்காக எதிர்பார்த்திருப்பதாகவும் எனினும், மனித உரிமை நிலைமைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், உலகில் எந்தவொரு நாட்டிடம் இருந்தும் வரும் போட்டியைத் தமது அரசாங்கம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு வர்த்தகச் சலுகை வழங்கக் கூடாது என்று கோரும் முறைப்பாடு தொடர்பாக அமெரிக்கா விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கை அரசும் அதில் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment