Sunday, January 15, 2012

கட்டார் தலைவர் இலங்கை வந்தார்!

கட்டார் இராஜ்ஜியத்தின் தலைவர் அமீர் ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானி இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரிலேயே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு,
கட்டார் தலைவர் அமீருடன் அந்த நாட்டு உயர்மட்ட அரசியல் அதிகாரிகள் குழுவொன்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவொன்றும் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த கட்டார் இராஜ்ஜியத்தின் தலைவரை விமான நிலையத்தில் வைத்து முப்படையினரின் மரியாதையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவேற்றார்.
கட்டார் தலைவரின் இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்குறிய இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

free counters