Sunday, January 1, 2012
பாம்பு வேடத்தில் மல்லிகா !
நம்ம ஊரில் எடுக்கப்பட்ட நீயா டைப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார் மல்லிகாஷெராவத். ஒஸ்தியில் சிம்புவோடு ஆடியவர், தசாவதாரத்தில் கமலோடு கட்டிப்பிடித்தவர் என்கிற தமிழ்படங்களின் பயோ-டேட்டாவும் இருக்கிறது தங்கத்துக்கு.
ஒரு பெண் அவ்வப்போது பாம்பாக மாறி, விரோதிகளை கொத்தித் தள்ளி சாகடிப்பதுதான் நீயா கதை.
மல்லிகா ஷெராவத்தின் ஹிஸ் எப்படி என்பதை நாமே பார்த்து தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாம் சொல்லப் போவது கேரளாவுக்கு மல்லிகாவை வரவழைத்த வேண்டுதல் தொடர்பான செய்திதான்.
இந்த பாம்பு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, கேரளாவில் உள்ள மணரசளா என்ற பாம்பு கோவில் பற்றி கேள்விப்பட்டாராம் மல்லிகா.
படம் வெளியான பின்பு அங்கு வருவதாகவும் வேண்டிக் கொண்டாராம். பிரார்த்தனை செய்த மாதிரியே சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டாராம் அங்கே.
சினிமாவில் சட்டையை உரிக்கிற பாம்பு, நிஜக் கோவிலில் இழுத்து போர்த்திக் கொண்டு போனதுதான் விசேஷ செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment