Monday, January 16, 2012
காதல் இல்லை - நட்புண்டு ! ஸ்ருதி ஹாஸன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் '3'. இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடி சேர்கிறார் உலக நாயகன் கமல்ஹாஸனின் மகள் ஸ்ருதி ஹாஸன்.
இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர்களிருவருக்கும் இடையில் காதல் தொடர்பு காணப்படுகிறதோ என்ற அச்சத்தில் ரஜினியின் குடும்பம் உறைந்துபோயுள்ளது.
இந்நிலையில், 'தனுஷுக்கும் எனக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை. தொழில் ரீதியாகவே நாம் நட்பு கொண்டுள்ளோம். அதில் காதல் இல்லை' என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், 'புத்தாண்டு அன்று நான் என் அம்மா, தங்கையுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்களில் மிகவும் இயல்பானவராக இருந்தவர் தனுஷ். அதனால் அவருடன் அதிகம் நட்புண்டு. அத்துடன், என்னுடைய நல்ல நண்பியான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்திருக்கும் அளவுக்கு நான் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment