காங்கோ நாட்டில் நள்ளிரவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டின் அதிபரின்
ஆலோசகர் மற்றும் நிதியமைச்சர் மட்டடா போன்யோ மாபோன் விபத்தில் சிக்கினர்.
இதில்
அதிபரின் ஆலோசகர் சம்பவ இடத்தில் பலியானார். நிதியமைச்சர் படுகாயத்துடன்
மீட்கப்பட்டுள்ளார். மேலும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பயணிகள்
விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இவ்விபத்து குறித்து அந்நாட்டு உடனடி தகவல் ஏதும் வெளியிடவில்லை. சீன இணையதளம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
முறையான தொழில்நுட்ப மில்லாதது மற்றும் பராமரிப்பற்ற விமான நிலையங்கள்
கொண்டுள்ளதே இவ்விபத்திற்கு காரணம் எனத் தெரிகிறது.இவ்விபத்து புக்காவ்
என்ற இடத்தின் அருகே நடந்தது.

No comments:
Post a Comment