Monday, February 13, 2012

குளியல் தொட்டியில் இறந்து கிடந்தார் பாப் பாடகி ஒயிட்னி !

குளியல் அறையில் இறந்து கிடந்த பாப் பாடகி ஒயிட்னி ஹுஸ்ட்டனின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரும் என்று காவலதிகாரி விண்ட்டர் தெரிவித்துள்ளார்.
பாப் பாடகி ஒயிட்னி ஹுஸ்ட்டன், பெவர்லி மலையில் உள்ள பெவர்லி ஹில்ட்டன் விடுதியில் தங்கியிருந்த போது குளியல் அறையின் தொட்டியில் முகம் கவிழ்ந்து உயிரிழந்து கிடந்தார் என்று துணைத் தலைமை காவலதிகாரி கோரோனெர் எட் விண்ட்டர் தெரிவித்துள்ளார்.

ஹுஸ்ட்டனின் உடல், சவப்பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் விஷம் கலந்திருக்கிறதா என்று விஷப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
உடலில் காயம் எதுவும் இல்லை. எனவே இன்னும் ஒரு வாரத்தில் இவரது பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் என்றும் துப்புத்துலக்கும் அதிகாரிகள் சம்மதித்தால் அவை வெளியே தெரிவிக்கப்படும் என்று விண்ட்டர் கூறியுள்ளார்.
TMZ என்ற செய்தி இணையதளம், இறந்து போன பாடகியுடன் அவரது தலையலங்கார நிபுணர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இரண்டு பாதுகாவலர் உடனிருந்தனர்.
குளிக்கப்போன பாடகி ஒருமணி நேரமாகியும் வெளியே வராததால் தலையலங்கார நிபுணர் குளியல் அறைக்குள் போய்ப் பார்த்தார். அப்போது முகம் கவிழ்ந்தும், கால்கள் உயர்ந்தும் மரணமடைந்து கிடந்ததைப் பார்த்தார்.
பின்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். இவரது அறையில் ஆறு மாத்திரை போத்தல்கள் இருந்தன.
ஆனால் சட்டரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் அவர் அறையில் இல்லை என்று விபரங்களை TMZ செய்தி இணையதளம் அடுக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணிக்கு துணை மருத்துவ நிபுணர்கள் ஹுஸ்ட்டனின் 48 வயது மகளான பாபி கிறிஸ்டினா பிரௌனை, லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்க அழைத்துச் சென்றனர்.
இந்தப் பெண்ணும் அதே விடுதியில் தான் தங்கியிருந்தார். தாயுடன் பல இசை நிகழ்ச்சிகளில் கடந்த வாரம் கலந்து கொண்டார்.
ஹுஸ்ட்டன் இறந்த அன்று இரவு கிராமி விருது வழங்கும் விழாவில் அவரது கச்சேரி நடப்பதாக இருந்தது. மிகப்பெரிய அளவில் ஹுஸ்ட்டன் அன்று அவரது ரசிகர்களால் நினைவுகூரப்பட்டார்.
ஹுஸ்ட்டனுக்காக மாலை இசை நிகழ்ச்சியை நடத்திய அவரது குருவும், தாயாரிப்பாளருமான கிளைவ் டேவிஸ், ஒரு கட்டத்தில் தனது நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு அனைவரையும் அமைதியாக இருக்குமாறு வேண்டினார்.
அனைவரும் அமைதியாக இருந்த அந்த வேளையில் திறையில் ஹுஸ்ட்டன் வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி காட்டப்பட்டது ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தனர்.
ஹுஸ்ட்டனின் நண்பர்களும், குடும்பத்தாரும் அவர் மரணத்திற்கு முன்பு நல்ல மனநிலையில் இருந்ததாகவே கூறினர்.
ஆரம்பத்தில் இவர் Yes Jesus Loves Me என்ற பாடலை கெல்லி பிரின்ஸ் என்பவருடன் இணைந்து பாடினார். பின்பு போதைப் பழக்கத்துக்கு ஆளானார். வெளியே கரடுமுரடாகத் தோன்றினாலும் உள்ளூர அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கியதாக பிரின்ஸ் கூறினார்.
பின்பு கெவின் கோஸ்ட்னெர் என்பவருடன் இணைந்து “Saving All My Love For You” என்ற பாடலைப் பாடினார். The Body Guard என்ற ஆல்பத்தில் திரையில் தோன்றிப் பாடினார்.
இவருடன் இணைந்து My Prerogative மற்றும் Mr. Telephone Man போன்ற பாடல்களைப் பாடிய பாபி பிரௌனைக் காதலித்து மணந்தார்.
இவர்களுக்கு பாபி கிறிஸ்டினா பிரௌன் என்ற பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பத்தாண்டுகள் கழித்து கணவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக காவல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

free counters