Sunday, February 26, 2012

இத்தாலி கப்பல் விபத்திற்கு காரணம் என்ன: காதலி பரபரப்பு பேட்டி!

இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்ததிற்கு கப்பல் கப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவின் கவனக்குறைவு தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

எனவே அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மேலும் இவர் விபத்து நடந்த போது மது அருந்தவில்லை என தெரிவித்தார்.
ஆனால் அவர் குடிபோதையில் இருந்தார் என பயணி ஏஞ்சலோ பாப்ரி உட்பட பலர் தெரிவித்தனர். விபத்து நடப்பதற்கு முன்பு கப்பலில் உள்ள ஓட்டலில் கப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ ஒயின் (மது) சாப்பிட்டார்.
அவருடன் ஒரு அழகான பெண்ணும், மற்றொரு அதிகாரியும் இருந்தனர். ஒல்லியான உருவமுள்ள அப்பெண்ணும், இவரும் இணைந்து இரவு 9.05 மணி வரை மது அருந்தினர்.
அதன் பின்னர் கப்டன் ஸ்கெட்டினோ 9-45 மணிக்கு பிரிட்ஷ் பகுதிக்கு செல்ல கப்பலை செலுத்தினார். குடிபோதையில் இருந்த அவர் கவனகுறைவாக கப்பலை செலுத்தியதால்தான் பாறையில் மோதி கவிழ்ந்தது என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அவருடன் மது அருந்தியதாக கூறப்படும் பெண் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, விபத்து நடக்கப் போகும் சில மணி நேரங்களுக்கு முன்பு கப்டனும், நானும் சேர்ந்து தான் இருந்தோம். மூன்று வருடங்கள் நட்புடன் பழகிய நாங்கள் இருவரும் காதலர்களாக மாறப் போகும் தருணத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது.
அந்நேரத்தில் அவர் தான் கப்பலின் கப்டன் என்பதை மறந்து என்னுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். இதுவே விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நண்பரே தங்களின் பதிவுகளை பிரபல்யபடுத்த விரும்பினால் கீழுள்ள முகவரிக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.
    http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

    ReplyDelete

free counters