Tuesday, March 13, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது: பிரணாப் முகர்ஜி


ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இம் மாத இறுதியில் இது ஓட் டெடுப்புக்கு வருகிறது. இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று டெல்லி மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்
.

இதற்கு நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பதில் அளிக்கையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை சூசகமாக தெரிவித்தார். ஐ.நா.சபையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிக்க கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் இந்தியாவின் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment

free counters