Thursday, November 8, 2012

பள்ளி மாணவியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தளித்த நண்பன்!


திருவனந்தபுரம் அருகே உள்ள கடமுடுக்கியைச் சேர்ந்தவர் ரெஜினேஷ் (வயது 28). மரச்சிற்ப தொழில் செய்து வருகிறார். இவர் முப்பத்தெட்டாம் தேசம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு மரச்சிற்ப வேலைக்காக சென்றார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.


ஆசை வார்த்தைகள் கூறி ரெஜினேஷ், அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்தார். மாணவியும் ரெஜினேசை முழுவதுமாக நம்பினார். சில தினங்களுக்கு முன்பு மாணவியை ரெஜினேஷ் கடத்திச் சென்றார். மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை ஆலுவா போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜினேசையும், மாணவியையும் தேடி வந்தனர். இந்தநிலையில் ஆலுவாவில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர். ரெஜினேசும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை ரெஜினேஷ் கடத்தி கற்பழித்தது மட்டும் அல்லாமல் அவரது நண்பர்கள் 10 பேருக்கும் விருந்தாக்கியது தெரியவந்தது. இதை மாணவியே போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். ரெஜினேசின் நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

free counters