Wednesday, April 22, 2020
இந்தியாவில் உள்ள 101 இலங்கை மாணவர்கள் அழைத்துவர நடவடிக்கை
இந்தியாவில் தங்கியுள்ள 101 மாணவர்களை நாளைய (23) தினம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அமரிட்சர் நகரத்தில் தங்கியுள்ள மாணவர்களே யூ.எல்.146 இலக்க விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதேவேளைஇ பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நேற்று மாலை (22) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.லாகுர் நகரில் இருந்து 93 பேரும் கராச்சி நகரில் இருந்து 20 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
இவர்கள் புனானை மற்றும் வெருகல் தடுப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை கோயம்புத்தூர் நகரில் இருந்து 117 பேரும்இ நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 93 பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவர உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment