Wednesday, April 22, 2020

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த 11 பேரும் பேருவளை பகுதியில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாட்டில் இதுவரை 321 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளைஇ இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 104 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

free counters