Tuesday, September 3, 2013

ஒரே நாளில் 4 சிறுமிகள் உள்பட 5 பேர் வல்லுறவு!

டெல்லியில் ஒரே நாளில் 4 சிறுமிகள் உள்பட 5 பேர் வல்லுறவுக்குட்படு
த்தப்பட்டுள்ளனர்.

டெல்லி வெல்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தனது மாற்றாந்தந்தையால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகியுள்ளார்.
முன்னதாக மேற்கு டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 வயது சிறுமி பக்கத்து வீட்டில் உள்ள 19 வயது இளைஞர் ராஜு என்பவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து பொலிஸார் ராஜுவை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் 40 வயது பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோரா(24) என்பவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் கோராவை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தவிர டெல்லி ஆர்.கே. புரம் பகுதியில் தனது வீட்டுகழிவறையில் வைத்து 10 வயது சிறுமி 16 வயது பக்கத்து வீட்டு சிறுவனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிறுவனை கைது செய்தனர். கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் பள்ளிக்கு வெளியே 9 வயது சிறுமி 42 வயது ஆட்டோக்காரர் ஓம் பிரகாஷால் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார் பின்னர் ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

free counters