
இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரவலாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ
"இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரப்ப முற்படும் சக்திகள் தொடர்பில் நாட்டின் புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சில முஸ்லிம் தீவிரவாத சக்திகள் தீவிரவாதத்தை பரப்புவதற்கான மையப் புள்ளியாக இலங்கையை பயன்படுத்த எத்தனிக்கின்றன.
அத்துடன் இலங்கைக்குள் இந்த சக்திகள் தமது தீவிரவாத கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றன எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இலங்கை தற்போது கொண்டிருக்கும் சுதந்திரமான போக்கை தொடரவிடாது செய்வதற்காக அவர்கள் இலங்கையின் எதிர்காலத்தை தமது கையிலெடுக்கவிழையலாம்.
இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் பற்றி தவறான கருத்துக்கள் இருப்பதனால் தான் சீனாவுடனான இலங்கையின் நல்லுறவு சில நாடுகளுக்கு பிரச்சினையாக தெரிகின்றது. இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார தொடர்பானவை மட்டுமே. சீனா பல காலமாக இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளியாக இருந்து வருகின்றது.
அது இலங்கையின் முக்கிய பொருளாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாகாது என்பதில் இலங்கை மிகத் தெளிவாக உள்ளது" என்றார்.

No comments:
Post a Comment