Tuesday, September 3, 2013

கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,

வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்கினேஸ்வரன், கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபைத் தேர்தலில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநெச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் பாரிய

அளவிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர்களால்  வெளியிடப்படவிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

free counters