ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நியூயோர்க் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல அதிகாரிகளும் இடம்பெறுகின்றார்கள்.
ஐ.நா. பொதுச் சபையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி அங்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல முக்கிய தலைவர்களையும் சந்திப்பார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்பிவைத்தமைக்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தை இலங்கை கடுமையாகச் சாடியிருக்கும் நிலையில் ஜனாதிபதிக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment