ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளதாக நியூயோர்க்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான பொறுப்புக்கூறும் கடமைப்பாடு, ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டமை உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிகின்றது.
இலங்கைக்குத் தெரியப்படுத்தாமல் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு அனுப்பிவைத்தமையை இலங்கை அரசாங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தமை தெரிந்ததே.

No comments:
Post a Comment