பங்கு விற்பனை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணத்திற்கு 11 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 10 மில்லியன் அமெரிக்க டொலரும் அபராதமாக விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோளன் குறூப் நிறுவனரான கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி அளித்ததாகவும் அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ் ராஜரட்ணம் தொடர்பில் எப்.பீ.ஐ விசாரணைகளை நடத்தியதாவும் அதில் தீவிரவாதக் குழுவிற்கு ராஜ் உதவி புரிந்ததாக ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவருடைய சட்டத்தரணி ஜோன் டவுட் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment