Thursday, October 13, 2011

கடாபியின் மகனான முத்தாசிம் கைது.

லிபிய ஜனாதிபதியின் கடாபியின் மகனான முத்தாசிம் கடாபி சிர்த் என்னுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அங்கிருந்து பெங்காசி என்ற இடத்திற்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1975ல் பிறந்த இவர் மருத்துவராகவும், இராணுவ வீரராகவும் இருந்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் கடாபிக்கு எதிராக புரட்சி படைத் தாக்குதல் நடத்தி லிபியாவை கைப்பற்றியது. இந்நிலையில் கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் மட்டும் அவரது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது.
அதன் பெரும் பகுதியை புரட்சி படை வென்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் கடாபியின் மகனை புரட்சி படைகள் நெருங்கியதாகவும் இன்று காலை வேளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

free counters