Sunday, October 9, 2011

கொலன்னாவையில் துப்பாக்கிச் சூடு! முன்னாள் எம்.பி.உட்பட மூவர் பலி! பலர் காயம்!!

கொலன்னாவையில்  சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் எம்.பி. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் எம்.பி. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


முல்லேரியாவில் ஊரடங்குச் சட்டம் அமுல்

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

free counters