Tuesday, October 11, 2011

முல்லேரியா துப்பாக்கிச் சண்டை: மேலும் ஐவர் கைது

முல்லேரியாவில் கடந்த 8ம் திகதி தேர்தல் தினத்தன்று எம்பி துமிந்த சில்வா மற்றும் முன்னாள் எம்பி பாரத லக்ஷ்மன் ஆகியோரின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சண்டையுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் குற்ற விசாரணை பிரிவினர் நேற்று ஒருவரை கைது செய்த நிலையில் இன்று மேலும் ஐவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

free counters