Sunday, November 20, 2011

இலங்கைக்கு மின்சாரம் - வைகோ குற்றச்சாட்டு.

இலங்கைக்கு கடல் வழியே மின்சாரம் அளிக்கவே கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு இந்திய அரசு இந்த அளவுக்கு முனைப்புக் காட்டுவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்த அளவுக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், இலங்கைக்கு கடல் வழியே மின்சாரம் அளிப்பதே இந்தியாவின் திட்டம்.
இதற்காகத்தான் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர முனைப்புக் காட்டுகிறது. 2010 ஜூன் 9 ல் இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய மின் உற்பத்திக் கழகமும், இலங்கை மின்வாரியமும் கையெழுத்திட்டுள்ளன.
கூடங்குளத்தில் கிடைக்கவுள்ள மின்சாரத்தில் பாதிக்கும் குறைவான அளவே தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்" என்றார்.

1 comment:

  1. எப்படி இருந்த வைகோ . இப்படி ஆயிட்டாரு ...!

    ReplyDelete

free counters