கடந்த ஒன்றரை வருடகாலத்தில் மட்டும் யாழ் குடாநாட்டில் எச்.ஐ.வி
தொற்றுக்குள்ளான 43 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர்
உயிரிழந்துள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின்
பால்நிலை தொற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.கணேசலிங்கம்
வெளியிட்டார்.
யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.சிறைச்சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான முதல் நோயாளி 1993 ஆம் ஆண்டு இனங்காணப்பட்டார். எனினும் அதன்பின்னர் எச்.ஐ.வியின் பரவுகையின் வேகம் அதிகரித்துள்ளது. இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோரில் 16 வீதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்களாகவும், 42 வீதமானோர் 15, 24 வயது வரையானோர் ஆகவும் மிகுதி 42 வீதமானோர் 25 வயதுக்கு மேற்பட்டவராகவும் உள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடகாலத்தில் மட்டும் அதாவது 2010 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஜூலை மாதம் வரையில் யாழ் குடாநாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 43பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடங்களில் கொழும்பு மாவட்டம் முன்னிலையில் உள்ளது. கம்பஹா, கண்டி ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.
இவ்வாறு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமைக்கு இடப்பெயர்வுகள், வெளிநாட்டவர்களின் வருகை, தவறான பாலியல் நடத்தைகள் என்பனவே காரணங்களாகும். எனவே எய்ட்ஸ் என்ற நோயை இலங்கையில் கட்டுப்படுத்த சகல மட்டங்களில் உள்ளவர்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்பட வேண்டும். என்றார்.
இந்த நிகழ்வின் போது யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள இணைப்பாளர் எஸ்.தவக்குமார், யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறைக்கைதிகளிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment