தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் முறித்துக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் ஊடகப் பேச்சாளர்,
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரச தரப்பினருக்கும் இடையிலான 15வது
சுற்று பேச்சுவார்த்தை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில்
இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தை குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாவது,
"அரசாங்கம் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகளில் அவர்கள் எமக்கு வழங்கிய உறுதி மொழிகளை
நிறைவேற்றவில்லை.
ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
அரச தரப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெறும்
பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் தீர்மானம் பாராளுமன்றத் தெரிவுக்
குழுவில் அரச யோசனையாக முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அந்த புரிந்துணர்வு.
அது அப்படி இருக்க அரச தரப்பு இதுவரையில் ஒரு தீர்வுக்கும் முன்வரவில்லை.
நாங்கள் முன்வைத்த அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட பலவற்றிற்கு அவர்கள் உரிய
பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்வுக் குழுவிற்கு பெயர்களை சமர்பிக்க
வேண்டுமென அவசரமாக பெயர் கோருகின்றனர். நாங்கள் எப்படி வழங்க முடியும். அரச
- கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தை மாதம் ஆரம்பமானது. தெரிவுக் குழு
தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதமே பேசத் தொடங்கப்பட்டது.
தெரிவுக் குழு பேச்சுவார்த்தையும் அசர - கூட்டமைப்பு பேச்சுவார்த்தையும் சமாந்திரமாக நடைபெற வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
எனினும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தால்
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கு பற்ற முடியும் என நாம் கூறிவிட்டோம்.
பேச்சுவார்த்தை ஆரம்பமாகி ஒரு வருடத்தில் எதுவித தீர்வுகளும்
எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்காக அட்டவணைகளும் போட்டோம். ஆனால் அரசு
புதிய கதையைதான் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்கிறது. தொடர்ச்சியாக ஏமாற்றி
வருகிறது.
எனவே டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்வை முன்வைத்தால் பாராளுமன்றத் தெரிவுக்
குழுவுக்கு வருவோம். அடுத்த பேச்சுவார்த்தையில் இதற்கு பதிலளிக்க
முடியுமானால் அதில் கலந்து கொள்ள நாம் தயார். அடுத்த பேச்சுவார்த்தை 6ம்
திகதி என ஏற்கனவே திகதி குறிக்கப்பட்டுள்ளது."
என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

No comments:
Post a Comment