பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கின் நிர்வாண படம் எப்.எச்.எம். இண்டியா என்ற இதழில் வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பாகிஸ்தான்
நடிகை வீணா, இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ்(Bigg
Boss) நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பாலிவுட்டில் சில படங்களிலும்
நடித்துள்ளார்.
இவருடைய நிர்வாண படத்தை எப்.எச்.எம். இண்டியா என்ற இதழ் அட்டையில்
வெளியிட்டுள்ளது. அந்த படத்தில் தனது கையில் பாகிஸ்தான் உளவு நிறுவனம்
ஐ.எஸ்.ஐ என்ற எழுத்துகளை பச்சை குத்திக் கொண்டிருப்பது போல் உள்ளது.
இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து நடிகை
வீணா கூறுகையில், அந்த இதழில் வெளியாகி உள்ள படத்தில் இருப்பது நான் அல்ல.
அது கணணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த இதழுக்கு நான் படம் எதுவும் கொடுக்கவில்லை. என்னுடைய மேலாளரும்
சட்ட ஆலோசனை குழுவினரும் இந்த பிரச்னையை ஆராய்ந்து வருகின்றனர். படம்
வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மறுப்பு
தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்.எச்.எம் இதழ் ஆசிரியர் கபீர் சர்மா கூறுகையில், நடிகை வீணா
மாலிக், எங்கள் இதழுக்கு படம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கடந்த
நவம்பர் மாதம் 22ம் திகதி இந்தியாவின் மும்பையில் இந்த ஒளிப்படம்
எடுக்கப்பட்டது.
இதை காணொளியாகவும் பதிவு செய்து வைத்துள்ளோம். அத்துடன் இதழில் படம்
வெளியிடுவது தொடர்பாக வீணா மின்னஞ்சலும் அனுப்பி உள்ளார். அதில் படங்களை
பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதழின் அட்டையில் வெளியாகும் நாளை எதிர்பார்க்கிறேன் என்று
குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன என்று
கூறியிருக்கிறார். வீணாவின் படத்தை இணையத்தளத்தில் பார்த்த பலர் கடும்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சை
நிலவுகிறது.

No comments:
Post a Comment