Monday, December 5, 2011

அரசு கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு - நாளை பேச்சு!

இனப்பிரச்சினை தொடர்பான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஏற்கனவே திட்டமிட்டது போல் நாளைய தினம் (06) செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.


நாளை மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அதன் ஊடாகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாது பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு அறிவித்த நிலையில் நாளை மீண்டும் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters