ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளதாக
தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எதுவும்
கதைக்கப்பட மாட்டாதெனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்த செயற்குழு கூட்டத்தில் மொஹான் லால் கிரேரு தொடர்பில் எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கை குறித்து மாத்திரமே கலந்துரையாடப்படும் என ரணில்
விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று கட்சியின் யாப்பை மாற்றியமைக்கவும் தான் தயாரில்லை என
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

No comments:
Post a Comment