பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தன்னுடைய 2வது மனைவி கமீலாவையும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா இளவரசர் சார்லஸ் டயானாவை திருமணம் செய்து வில்லியம் ஹரி என்ற 2 மகன்களை பெற்றார்.
பின்னர் கார் விபத்தில் டயானா மரணம் அடைந்ததை அடுத்து இளவரசர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவை(64) 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
கமீலா அரண்மனையில் இருந்து வெளியேறி ரேமில் என்ற இடத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தங்குகிறார். அங்கு அவரது முடி அலங்கார நிபுணர் ஜோ கேன்ஸ்போர்டு தங்கி உள்ளார்.
மேலும் 10 நாட்களுக்கு ஒருமுறை அவருடன் ரகசியமாக தங்கியுள்ளார். இந்த விடயம் இளவரசர் சார்லசுக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது.
எனவே இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகள் இடையே பேச்சு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளன.


No comments:
Post a Comment